0
நுவரெலியா – இறம்பொடை நீர்வீழ்ச்சியை அண்மித்து குளிக்கச்சென்ற மூவர் காணாமற்போயுள்ளனர்.
வவுனியாவிலிருந்து சென்ற சிலர் இன்று பிற்பகல் நீர்வீழ்ச்சியை அண்மித்த ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
நீரின் வேகம் அதிகரித்தமையினால், 07 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமற்போன ஏனைய மூவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.