தமிழ் சினிமாவில் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. பல படங்களுக்கு இசையமைத்து பிறகு நடிகராகவும் வலம் வந்தார்.
இவர் நடிப்பில் மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி வீட்டில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குடிபோதையில் வந்த மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் வீட்டின் கதவு சேதமடைந்துள்ளது.
உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த மர்ம நபர்கள் பொலீஸாரை கண்டதும் காரில் ஏறி தப்பியுள்ளனர்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் அந்த காரின் உரிமையாளர் அஜய் வாண்டையாரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போழுது இச்சம்பவத்தில் ஈடுபட்டது வடபழனியை சேர்த்த பிரேம் குமார் மற்றும் மதுரையை சேர்ந்த அர்ஜுன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்து பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்