தமிழ், மலையாள படங்கள் தரத்தில் சிறந்தவையாக இருப்பதாகவும், தெலுங்கு படங்கள் பிரம்மாண்டமாக இருப்பதாகவும், கன்னட படங்கள் நாம் யோசிக்க முடியாத அளவு முன்னேறி சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார் சுஹாசினி.
இந்தி நல்ல மொழி அதை நாம் கற்று கொள்ள வேண்டும் என திரைப்பட நடிகை சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களிடம் நாம் பேச வேண்டுமென்றால் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், மலையாள படங்கள் தரத்தில் சிறந்தவை, தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் யோசிக்க முடியாத அளவிற்கு முன்னேறி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல தங்கை நகை கடையில் அட்சய திருதியை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் தற்கால சூழலில் தங்கம் சிறந்த முதலீடு என்றார்.
மலையாள மொழி படங்களை இன்று இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்ப்பதாகவும், துல்கர் சல்மான், பகத் பாசில் போன்ற மலையாள மொழி நடிகர்களை இந்திய மக்கள் பலரும் அறிந்திருப்பதாகவும் கூறினார்.
தென்னிந்திய படங்களுக்கு மிக பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ், மலையாள படங்கள் தரத்தில் சிறந்தவையாக இருப்பதாகவும், தெலுங்கு படங்கள் பிரம்மாண்டமாக இருப்பதாகவும், கன்னட படங்கள் நாம் யோசிக்க முடியாத அளவு முன்னேறி சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.
தென்னிந்திய வட இந்திய சினிமா இடையே நடைபெறும் மொழி சண்டை குறித்து சுஹாசினியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தம்மை போன்ற நடிகர்களுக்கு அனைத்து மொழிகளும் தெரிந்தே ஆக வேண்டும் எனவும், அனைத்து மொழிகளையும் மதித்தே ஆக வேண்டும் எனவும் கூறினார்
எல்லோரும் அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும் என கூறிய அவர், இந்தி நல்ல மொழி அதை கற்று கொள்ள வேண்டும் என கூறினார்.