காலையில் எழுந்ததும், சிலர் ஆரஞ்சு ஜூஸை குடித்துவிட்டு காலை உணவை உண்பார்கள்.
ஆனால் பொதுவாக சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்வதால், அமிலம் அதிகளவு உற்பத்தியாகி, வயிற்று வலி, குமட்டல், வயிற்று உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் காலை உணவிற்கு முன் பழங்களை சாப்பிட்டால், பழங்களில் உள்ள ஃபுருக்டோஸ் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மெதுவாக்கும்.
அதுவும் ஆரஞ்சு ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால், அது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சேதப்படுத்தி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை பாதிக்கும்.
நன்றி boldsky