சமைத்த உணவை குளிர்ந்த நிலையில் எப்போதும் உண்பது வயிற்றின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
குளிர்ந்த உணவுகளானது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும் மற்றும் இது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
நீங்கள் உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால் மற்றும் வயிற்று பிரச்சனைகளை தவிர்க்க விரும்பினால், உணவுகளை எப்போதும் சூடாக சாப்பிடுங்கள்.
இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது தயிர் சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு நல்லது தான்.
ஆனால் அந்த தயிரை இரவு நேரத்தில் சாப்பிட்டால் அது செரிமான மண்டலத்தை மோசமாக்கும்.
குறிப்பாக அசிடிட்டி மற்றும் அமில சுரப்பு பிரச்சனை உள்ளவர்கள் தயிரை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இரவு நேரத்தில் செரிமான மண்டலம் சற்று மந்தமாகவும், ஓய்வெடுப்பதற்கு தயாராகவும் இருப்பதால், தயிரை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை சந்திக்க நேரிடும்.
அடிக்கடி சூயிங் கம் சாப்பிடுவது அடிக்கடி வாயில் சூயிங் கம் போன்று மெல்லுவது தாடை வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை உருவாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வேண்டுமானால் ஒரு நாளைக்கு ஒரு சூயிங் கம் போதுமானது.
நன்றி boldsky