இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அதே வேளையில் கொத்தமல்லி, புதினா வீட்டில் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு மூலிகை பன்னீர் கிரேவி செய்யுங்கள். இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
உங்களுக்கு மூலிகை பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூலிகை பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்) மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மல்லித் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 2 டீஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப கேரட் பஜ்ஜி சர்க்கரை – 1 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் நெய் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு…
வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 3 (நறுக்கியது) இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) பூண்டு – 6 பல் (நறுக்கியது) கொத்தமல்லி – 1 கப் (நறுக்கியது) புதினா – 1 கப் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். * பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் தேவையான நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து கிரேவியில் ஊற்றி கிளறினால், மூலிகை பன்னீர் கிரேவி தயார்.
நன்றி | Boldsky