மன அழுத்தம் பொதுவான வியாதியாக மாறிக்கொண்டிருக்கிறது. அது மன நலம் சார்ந்த பிரச்சினையாக தெரிந்தாலும் உடலின் பல்வேறு பாகங்களையும் பாதிப்புக்கு ஆளாக்குகிறது.
மனஅழுத்தம் காரணமாக எந்தெந்த உறுப்பு எத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறது என்று பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு மண்டலம்: மன அழுத்தத்தின்போது `கார்டிசோல்’ எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படும்.
இது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதன் செயல்பாடுகளை முடக்கிப் போட்டுவிடும்.
அதன் காரணமாக வைரஸ் மற்றும் பிற வகையான நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடும். மன அழுத்தத்தில் இருக்கும்போது நோய்வாய்ப்படுவதற்கான காரணம் இதுதான்.
வயிறு: மன அழுத்தம் நீடித்துக்கொண்டிருந்தால் வயிற்றில் உள்ள இரைப்பையில் அமிலத்தின் அளவு அதிகரிக்க தொடங்கி விடும். இதனால் இரைப்பை அழற்சிக்கு வழிவகுக்கும். வயிற்றில் புண்களும் உண்டாகக்கூடும்.
இதயம்: மன அழுத்தம் ஏற்படும்போது, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இவை இரண்டின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது இதய ஆரோக்கியத்திற்கு கேடாக முடியும். கொழுப்பு,
சர்க்கரை: மன அழுத்தமானது புரதங்கள், கொழுப்புகள் மற்றும் கீட்டோன்களை சர்க்கரையாக மாற்றிவிடும். இந்த அதிகப்படியான சர்க்கரை ரத்த ஓட்டத்தில் கலந்து நீரிழிவு நோய்க்கு ஆளாக்கிவிடும். மேலும் இந்த சர்க்கரை வயிற்றை சுற்றி கொழுப்பு படிவதற்கும் வித்திடும். இதனால் தொப்பை பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பெண்கள் பெரும்பாலும் வேலை, குடும்பம் என்ற இரட்டை பொறுப்புகளை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது.
இத்தகைய பணிச்சுமை மனநலம் சார்ந்த கவலைக்கு உள்ளாக்கும். பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகிறார்கள்.
இது மனச்சோர்வு மற்றும் பிற மனநல கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் மன நலம் பேணுவது அவசியமானது.
உடல் ஆரோக்கியத்தைப் போலவே, மகிழ்ச்சியான மற்றும் மன நிறைவான வாழ்க்கைக்கு இது முக்கியமானது. மன நலனை பேணுவதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்