செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் கால்களை உறுத்தாத காலணிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை

கால்களை உறுத்தாத காலணிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை

2 minutes read

அதிக வேலைப்பாடுகள் இல்லாத, எளிமையான வகையில் இருக்க வேண்டும். வியர்க்க வைக்கும் இறுக்கமான காலணிகளை அணியும்போது, அது பாதங்களை உறுத்தி புண்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வெப்பம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில், பாதங்களில் உள்ள சருமம் வியர்வை, வறட்சி காரணமாக பாதிப்பு அடையும். இந்த சமயத்தில் பொருத்தமில்லாத காலணிகளை அணியும்போது, அவை மேலும் பாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கோடையில் காலணிகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கான சில யோசனைகள் இதோ:

இறுக்கமாக காலணிகள் அணியும் போது கால்களில் வீக்கம் ஏற்படலாம். காலின் பெருவிரலுக்கு இடையில் காற்றோட்டம் கிடைக்கும் வகையில், காலணிகளைப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டும். கோடையில், அணியும் காலணிகள் வழக்கமாக அணிவதை விட, அளவில் சற்று பெரியதாக இருக்க வேண்டும்.

அதிக வேலைப்பாடுகள் இல்லாத, எளிமையான வகையில் இருக்க வேண்டும். வியர்க்க வைக்கும் இறுக்கமான காலணிகளை அணியும்போது, அது பாதங்களை உறுத்தி புண்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, தட்டையான காலணிகளைத் தவிர்த்து, மெத்தென்று இருக்கும் வகையிலான மென்மையான காலணியையே தேர்வு செய்ய வேண்டும்.

தோல் சுவாசிக்க அனுமதிக்கும் வகையிலும், இயற்கை வெப்ப பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையிலும், காற்றோட்டமான காலணிகளைத் தேர்வு செய்வதும் கட்டாயம். தூய்மையான மெல்லிய தோலால் செய்யப்பட்ட காலணிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நாம் எந்த வகையான காலணிகளை அணிந்தாலும், அன்றைய நாள் முடிவில், கால்களுக்குச் சிறிது நேரம் மசாஜ் தேவை. பருவ நிலைக்கேற்ப குளிர்ந்த நீரிலோ அல்லது வெது வெதுப்பான நீரிலோ கால்களை சிறிது நேரம் வைத்திருந்த பின், லேசாக மசாஜ் செய்யலாம்.

சில வகை காலணிகள்:

கிளாடியேட்டர்கள்:

இது பெண்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய கோடைக்கேற்ற காலணி. அந்தக் காலத்தில், போரின் போது கிரேக்க மற்றும் ரோமானியர்கள் அணிந்திருந்த காலணி போன்றதாகும். இந்தக் காலணி, கீழ்ப் பகுதி தட்டையாகவும், உள்ளங்கால் முதல் மேல் பகுதி வரை அகலமான குறுக்குப் பட்டைகளுடனும் இருக்கும். இது அணிவதற்கு மிகவும் வசதியானது. வெளியூர் பயணத்தில் நீண்ட தூரம் நடக்கவும் ஏற்றது.

பிளிப்-பிளாப்ஸ்:

இவை முன்பக்கத்திலிருந்து தொடங்கி பக்கவாட்டில் முடிவடையும் வரை, ஆங்கில எழுத்து ‘ஒய்’ வடிவில் பட்டைகளைக் கொண்டிருக்கும். இறுக்கமாக இல்லாததால், பெண்களின் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், பாதங்களை உறுத்தாமலும் இருக்கும்.

ஸ்டைஸ்லைடர்கள்:

கடந்த சில ஆண்டுகளாக பெண்களிடம் பிரபலமாக இருக்கும் காலணி இது. இவை, பின்பக்கம் உயரம் குறைவாகவும், கால்களை மறைக்காமல் திறந்தபடி இருக்கும் வகையிலான காலணிகள்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More