சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் கைதான ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.
இதையடுத்து, சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு எதிராக பொலீசார் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுமட்டுமல்லாமல், விசாரணைக்கு ஹேம்நாத் நேரில் ஆஜராவதிலிருந்து நீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று சித்ராவின் தந்தை காமராஜ் இடைக்கால மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அதில் ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த சித்ரவதை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்துகொண்டார்.
ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.