மொனராகலை- சுதுவத்துபாரயில் வசித்து வந்த சிறுவன் ஒருவன் கோங்( கூலான் )பழத்தின் விதை தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளான்.
சிறுவன் கடந்த 28ஆம் திகதி வீட்டுக்கு அருகிலிருந்த கோங் எனப்படும் மரத்திலிருந்து பழத்தைப் பறித்து சாப்பிட்ட போது, அதன் விதை தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து சிறுவன் உடனடியாக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.