ஈராக்கில் பல மாதங்கள் நீடிக்கும் அரசியல் இழுபறிக்கு மத்தியில், அந்நாட்டின் சக்திவாய்ந்த ஷியா தலைவர் முக்ததா அல் சத்ர் ஆதரவாளர்கள் கூடாரங்களை எழுப்பி பாராளுமன்றத்தில் நீண்ட காலம் நிலைத்து நிற்க தயாராகி வருகின்றனர்.
கடந்த ஒக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் அரசு ஒன்றை அமைப்பதற்கு தவறிய நிலையில் அல் சத்ர் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களில் பாராளுமன்றத்திற்குள் இரண்டாவது முறையாக கடந்த சனிக்கிழமை ஊடுருவினர்.
“அடுத்த அறிவித்தல் வரை பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்” என்று அல் சத்ரின் அமைப்பு வெளியிட்ட சுருக்கமான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒக்டோபர் தேர்தல் இடம்பெற்று சுமார் 10 மாதங்கள் கடந்திருக்கும் நிலையிலும், இன்னும் புதிய அரசு ஒன்றை அமைப்பதில் தோல்வி கண்டுள்ளது.
2003 அமெரிக்கா தலைமையில் சதாம் ஹுஸைன் அரசு கவிழ்க்கப்பட்டது தொடக்கம் ஈராக்கில் ஆட்சி அமைப்பதில் சிக்கலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.