அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ அமைச்சரென்ற வகையில், சட்டமா அதிபரிடமிருந்து வழக்குச் சுருக்கங்களைப் பெற்றதாகவும், நெறிமுறையின்படி தனது பரிந்துரைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்ததாகவும்
எனவே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை, தனக்குள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் கடந்த ஓகஸ்ட் மாதம் (21) நீதித்துறைக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அலரிமாளிகையில் அப்போதைய பிரதமர் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, நாட்டிலுள்ள பெரும்பான்மையான நீதிபதிகள் பக்கச்சார்பான தீர்ப்புகளை வழங்குவதாகவும் அவர்கள் ஊழல்வாதிகள் எனவும் கூறியிருந்தார்.
இது போன்ற அவதூறு கருத்துக்கள் பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்து, இலங்கை மக்களுக்கு நீதித்துறை பற்றிய ஒரு திரிபுபடுத்தப்பட்ட பிம்பத்தை அளிக்குமென்று குற்றம் சாட்டியிருந்தனரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றம் தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்ராமநாயக்கவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.