தேவையான பொருட்கள்
இட்லி – 4
கடலைமா – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 3
குடைமிளகாய் – 2
பச்சைமிளகாய் – 2
இஞ்சி, வெ.பூண்டு விழுது – 1¼ டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தக்காளி சோஸ் – 20 மி.லி.
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
வெங்காயத்தாள் – 1 கட்டு
செய்முறை
இட்லியை 4 துண்டுகளாக நறுக்கி, கடலை மா, உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் இட்லிகளை மொறுமொறுவென்று பொரித்தெடுக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பச்சைமிளகாய், வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கவும். பின் இஞ்சி, வெ.பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சோஸ், மிளகுத் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும். பின்பு இதில் பொரித்த இட்லியைச் சேர்த்து பிரட்டவும். கடைசியில் வெங்காயத்தாள் போட்டு இறக்கி அலங்கரித்து பரிமாறவும்.