தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது எச். வினோத் இயக்கி வரும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை முடித்த கையோடு, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்காக அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித், நடிகை ஷாலினி கடந்த 2000ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு அனோஷ்கா எனும் ஒரு மகளும், ஆத்விக் எனும் ஒரு மகனும் உள்ளனர்.
மனைவி மகளுடன் அஜித்
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் தனது மனைவி மற்றும் மகளுடன் பேருந்தில் அஜித் பயணம் செய்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.