மாம்பழ சீசன் முடிவதற்குள்ளே என்னென்ன வித்தியாசமாக செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய ஆசப்படுறீங்களா… சீஸ் கேக் செய்யுங்க, சுவை பிரமாதமா பார்க்க மிகவும் அழகாகவும் இருக்கும். வீட்டிலுள்ள அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் !
தேவையான பொருட்கள்:
பிஸ்கட் – 1/2 பாக்கெட்
வெண்ணெய் – 10 கிராம்
பனீர் – 50 கிராம்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை – 100 கிராம்
மாம்பழச் சாறு – 1/2 கப்
மாம்பழத் துண்டுகள் – தேவையான அளவு
ஜெலடின் – 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன்
செய்முறை:
- வெண்ணெயை உருக்கி அதனுடன் பிஸ்கட்டை பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும்.
- இதை பெரிய பாத்திரத்தில் அடியில் மட்டும் நிரப்பவும்.
- ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு, தயிர், பனீர், லெமன் ஜூஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, அதை ஒரு பாத்திரத்தில் அல்லது மோல்டிங் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும்.
- கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே தூவி பரிமாறவும்.
நன்றி | வவுனியா நெற்