இந்த வருடத்தின் ஜூன் மற்றும் ஜுலை மாதங்களில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய 20,000 ரூபா போஷாக்கு உணவுக்கான கொடுப்பனவு இம்மாதத்தில் வழங்கப்படுமென மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மற்றும் ஜுலை மாதங்களில் மேற்படி தொகையை பெற்றுக்ெகாள்ளாதவர்களுக்கு இம்மாதத்தில் வழங்கும் நடவடிக்ைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அதுதொடர்பில் அமைச்சு தெரிவிக்ைகயில், நிதி கிடைக்காமை காரணமாக கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்கு உணவுக்கான கொடுப்பனவு வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும் எனினும் தற்போது அதற்கான நிதி கிடைத்துள்ள நிலையில் சில கட்டங்களாக நாடளாவிய ரீதியில் அந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.