எலுமிச்சை ஜூஸ் மிகவும் அற்புதமான பானம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த எலுமிச்சை ஜூஸ் உடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?
மஞ்சள் மருத்துவ குணம் கொண்ட அற்புதமான ஓர் பொருள். இதன் மருத்துவ குணத்தின் காரணமாகத் தான் பல வைத்தியங்களில் இது முக்கிய பொருளாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. மேலும் ஆராய்ச்சிகளிலும் மஞ்சள் உடலில் பல அற்புத மாயங்களை செய்யக்கூடிய ஒன்று எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது
அதிலும் மஞ்சள் கொண்டு உடலில் குறைந்தது 160 பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய மஞ்சள் தூளை எலுமிச்சை சாற்றுடன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் சுத்தமாகும்
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து, மஞ்சள் தூள் சேர்த்து பருகும் போது, உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும்.
இரத்த சர்க்கரை சீராகும்
எலுமிச்சை ஜூஸ் உடன் மஞ்சள் தூள் மட்டுமின்றி, ஒரு சிட்டிகை பட்டை பொடியை கலந்து பருகி வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராவதோடு, உள்காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
கொழுப்புக்கள் உடைக்கப்படும்
உணவு உண்ட பின் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் உடன் மஞ்சள் தூள் கலந்து பருகினால், பித்தநீரின் ஓட்டத்தை எழுப்பி, உணவுகளால் உடலில் தேங்கிய கொழுப்புக்கள் உடைத்தெறிய உதவும்.
மூளை கோளாறுகள்
இந்த பானத்தில் ஆற்றல்மிக்க அழற்சிக்கு எதிரான பண்புகள் உள்ளதால், இது முதுமை காலத்தில் மூளைச் செல்கள் சிதைவுற்று ஏற்படும் மூளை கோளாறுகளான அல்சைமர் மற்றம் டிமென்ஷியா போன்ற நோய்களைத் தடுக்கும்.
உடல் எடை குறையும்
ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் காலையில் எலுமிச்சை சாற்றுடன் மஞ்சள் தூள் கலந்து பருகி வர, நல்ல பலன் கிடைக்கும்.
மலச்சிக்கல்
நாள்பட்ட மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வருபவர்கள், இந்த பானத்தை தினமும் பருகி வந்தால், செரிமானங்ம மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
ஆற்றல் அதிகரிக்கும்
நீங்கள் எப்போதும் சோர்வை உணர்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்க இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் பருகி வாருங்கள்
கல்லீரல் செயல்பாடு மேம்படும்
மஞ்சள் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, உணவுகள் மற்றும் சுற்றுச்சூழலால் உடலினுள் சேரும் டாக்ஸின்களை உடைத்தெறியும். எனவே உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், இந்த பானத்தை பருகுங்கள்.
பித்தப்பை
இந்த பானம், பித்தப்பையில் பித்தநீரின் உற்பத்தியைத் தூண்டும். இந்த பித்த நீரானது உணவு சீராக செரிமானமாவதற்கு ஆதரவளிக்கும். மேலும் இந்த பானம் பித்தகற்கள் உருவாவதைத் தடுக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இந்த பானத்தல் ஆன்டி-மைக்ரோபியல் பண்பு வலிமையாக இருப்பதால், இதனைப் பருக நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படுவது தடுக்கப்படும்.
தேவையான பொருட்கள்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – 1 கப்
எலுமிச்சை – ½
தேன் – சிறிது
பட்டை பொடி – 1 சிட்டிகை
தயாரிக்கும் முறை
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன், மஞ்சள் தூள், பட்டை பொடி சேர்த்து கலந்து, பருக வேண்டும். அதிலும் இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால், இன்னும் நல்லது.
ஆதாரம்: ஒன்இந்திய நாளிதழ்