உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கா விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் அந்நாட்டு மத்திய வங்கி கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது.
தனது முக்கிய வட்டி வீதத்தை மேலும் 0.75 வீத புள்ளிகளால் உயர்த்தி இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்மூலம் இலக்கு வரம்பு 3 வீதத்தில் இருந்து 3.25 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் கடன் பெறும் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என்று வங்கி குறிப்பிட்டுள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் செலவு கடுமையான பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும் என்ற கவலைக்கு மத்தியிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட்டி வீதத்தை அதிகரித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தை வீழ்ச்சிகண்டது. எண்ணெய் விலைகள் சுமார் ஒரு வீதம் குறைந்தன.
பணவீக்கம் காரணமாக உலகில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் வங்கிகளும் தனது வட்டி வீதத்தை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.