8
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, நந்திக்கடல் குளங்கள் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயமாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது.
கடற்றொழில், கிராமிய பொருளாதாரம் மற்றும் அரச அமைச்சுகள் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் இதில் கலந்துகொண்டனர். இதன்போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது