அவுஸ்திரேலியாவில் மக்கள் மன்னராட்சி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரிட்டன் மகாராணி எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி காலமானார். அவரது மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் இரங்கல் தெரிவித்தன. அவுஸ்திரேலியாவிலும் பிரிட்டன் மகாராணி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளை தங்களது காலணி நாடுகளாக பயன்படுத்தி வந்த பிரிட்டன் நாட்டின் மகாராணி மறைவுக்கு அரசு துக்கம் அனுசரித்ததற்கு அவுஸ்திரேலிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மன்னராட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
அவுஸ்திரேலியாவின் 4 முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நவீன காலத்தில் மன்னராட்சி முறை தொடர்வது அவமானகரமானது எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள் இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.