யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனத்தில் மறைத்து கொண்டுசெல்லப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முழங்காவிலிலிருந்து கல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தை சாவகச்சேரி நகரில் பொலிஸார் இன்று(25) காலை வேளையில் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது கற்களுக்குள் மரக்குற்றிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலை, முதிரை, வீரை ஆகிய மரக்குற்றிகளே இவ்வாறு மறைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சந்தேகநபரை சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.