எம்ஜிஆர், கமல் என முன்னணி பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சித்து கடைசியில் மணிரத்தினம் இந்த படத்தை எடுத்த தனது கனவை முடித்துக் காட்டி உள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது.
இரவு, பகல், உணவு, உறக்கம் இன்றி தனது உயிரை கொடுத்த மணிரத்தினம் இந்த படத்தை எடுத்துள்ளார். அந்த அளவுக்கு இந்த படத்தின் மீது தனது காதலை வைத்துள்ளார் மணிரத்தினம். இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி சர்வதேச அளவில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழு தீயாய் வேலை செய்து வருகிறது. கார்த்தி, விக்ரம், திரிஷா, ஏஆர் ரகுமான், மணிரத்தினம், ஜெயம் ரவி போன்றோர் எல்லா மாநிலங்களுக்கும் சென்று படத்தின் ப்ரோமோசனை செய்து வருகிறார்கள். அதேபோல் மணிரத்தினத்தின் மனைவி மற்றும் நடிகையுமான சுஹாசினி ஹைதராபாத்தில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய சுஹாசினி, பொன்னியின் செல்வன் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் எடுக்கப்பட்டது. எனவே இது தெலுங்கு மக்களுக்கான படம். நீங்கள் இந்த படத்தை வெற்றி வெற்றியடையச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்
இவ்வாறு சுஹாசினி பேசியது மிகப்பெரிய சர்ச்சையாய் வெடித்துள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சை மண்ணை ஆட்சி செய்த சோழர்களின் வரலாற்று காவியம் தான் பொன்னியின் செல்வன். தமிழர்களின் பெருமையை படைச்சாற்றும் விதமாக எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை தெலுங்கு படம் என்று சொல்லியது பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சுஹாசினி பேசிய அந்த வீடியோவை பதிவிட்டு, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகம் நடைபெற்றதால் இது தெலுங்கு மக்களின் படம் என்று சுஹாசினி கூறியுள்ளார் என கழுவி ஊற்றியுள்ளார். மேலும் சுகாசினி இவ்வாறு சர்ச்சையாக பேசி சொந்த செலவிலேயே சூனியம் வைத்துக் கொண்டார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.