பொலன்னறுவை – அக்பர்புர, பங்குரான பகுதியிலுள்ள இரண்டு வீடுகளில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினர்களுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று வெள்ளிக்கிழமை (30) அதிகாலை 4.40 மணியளவில் பொலன்னறுவை – புலஸ்திபுர பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது அயுதங்களுடன் 32 மற்றும் 47 வயதுகளுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீடுகளில் இருந்து 303 ரக துப்பாக்கி, 303 ரக மெகசீன், 7.62 x 51 ரவைகள், 7.6 x 39 ரவைகள், வாள்கள், இரும்பு துப்பாக்கிச் சன்னங்கள், மோட்டார் சைக்கிள் செயின்கள், சொட்கன் துப்பாக்கி அதன் தோட்டாக்கள் போன்றவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த புலஸ்திபுர பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.