ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் சோதனை நடவடிக்கையின்போது இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு சில மணி நேரங்களின் பின் கிழக்கு ஜெரூசலம் சோதனைச்சாவடி ஒன்றில் நேற்று (09) இஸ்ரேல் படைவீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தாக்குதல்தாரியை பிடிக்க இஸ்ரேல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஷுவாபத் பலஸ்தீன அகதி முகாமுக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் மற்றொரு இஸ்ரேலியர் படுகாயம் அடைந்துள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ள பகுதிகளை இஸ்ரேலி பொலிஸார் சுற்றிவளைத்ததோடு கிழக்கு ஜெரூசலத்தின் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பையும் பலப்படுத்தியது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை, தனது பதின்ம வயதுகளில் இருக்கும் இரு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய படையால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.