செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் மட்டன் வெங்காய மசாலா

மட்டன் வெங்காய மசாலா

2 minutes read

தேவையான பொருட்கள்:

  • மட்டன் – 1/2 கிலோ
  • தேங்காய் எண்ணெய் – 1/2 கப்

ஹோட்டலில் மட்டும் எப்படி உணவோட சுவை வேற லெவலில் இருக்கு? அந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க! ஹோட்டலில் மட்டும் எப்படி உணவோட சுவை வேற லெவலில் இருக்கு? அந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க!

  • சோம்பு – 2 டீஸ்பூன்
  • பட்டை – 1 துண்டு
  • ஏலக்காய் – 4

புதினா தொக்குபுதினா தொக்கு

  • கிராம்பு – 4
  • பிரியாணி இலை – 1
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • வெங்காயம் – 1/2 கிலோ
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • தக்காளி – 3 (அரைத்துக் கொள்ளவும்)
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
  • மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகத் தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

  • முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அந்த மட்டனில் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மட்டனை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, அதை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
  • பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூசி நன்கு வதக்க வேண்டும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
  • அடுத்து, அதில் மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
  • பின்பு வேக வைத்துள்ள மட்டன் மற்றும் நீரை ஊற்றி கிளறி, வாணலியை மூடி வைத்து, குறைவான தீயில் 15 நிமிடம் வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மட்டன் வெங்காய மசாலா தயார்.

நன்றி | Tamilbeauty.tips

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More