செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் மட்டன் கைமா கிரேவி

மட்டன் கைமா கிரேவி

2 minutes read

தேவையான பொருட்கள்:

மட்டன் கைமா – 300 கிராம்

தக்காளி – 1 (நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

பூண்டு – 3 பல் (நறுக்கியது)

அரிசி கழுவிய தண்ணீர் – 1/2 கப்

தண்ணீர் – 1/2 கப்

கொத்தமல்லி – சிறிது

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்

பட்டை – 1/4 இன்ச்

கிராம்பு – 2

கறிவேப்பிலை – சிறிது

பிரியாணி இலை – 1

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 1/4 கப்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் மட்டன் கைமாவை நீரில் 2 முறை நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, மீண்டும் 2 முறை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கவும்.
  • பிறகு மட்டன் கைமாவை சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும்.
  • அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அதில் அரிசி கழுவிய நீர் மற்றும் சாதாரண நீரை ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு இறக்கவும்.
  • அதற்குள் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • விசிலானது போனதும், குக்கரைத் திறந்து, அதில் அரைத்த தேங்காய் சேர்த்து, கிரேவிக்குத் தேவையான அளவு நீரை ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து 0 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், மட்டன் கைமா கிரேவி தயார்.

நன்றி | Tamilbeauty

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More