0
தேவையான பொருட்கள்:
- பட்டாணி – 1 கப் (நற்பதமானது/உலர்ந்தது)
- சீரகம் – 1/2 கப்
ஹோட்டலில் மட்டும் எப்படி உணவோட சுவை வேற லெவலில் இருக்கு? அந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க! ஹோட்டலில் மட்டும் எப்படி உணவோட சுவை வேற லெவலில் இருக்கு? அந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க!
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
புதினா தொக்குபுதினா தொக்கு
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிது
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
- வெங்காயம் – 1 (நறுக்கியது)
- தக்காளி – 1 (நறுக்கியது)
செய்முறை:
- நீங்கள் உலர்ந்த பட்டாணியைப் பயன்படுத்தினால், அந்த பட்டாணியை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். நற்பதமான பட்டாணியை பயன்படுத்தினால், இந்த பாயிண்ட்டை விடுங்கள்.
- பின்னர் மிக்சர் ஜாரில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
- பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளற வேண்டும்.
- அடுத்து வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்த நன்கு கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பட்டாணி மசாலா தயார்.
குறிப்பு:
- இந்த ரெசிபியில் உலர்ந்த பட்டாணி பயன்படுத்தப்பட்டுள்ளது. வேண்டுமானால் நற்பதமான பட்டாணியையும் பயன்படுத்தலாம்.
- வெககாயம் தக்காளி அரைக்கும் போது, அத்துடன் சிறிது தேங்காய் சேர்த்து, கிரேவி நல்ல ப்ளேவரில் இருக்கும்.
- நிறைய கிரேவி வேண்டுமானால், மொத்தமாக 3 தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி | Tamilbeauty