எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் உடல்நலக் குறைவு காரணமாக தமது சொந்த ஊரான விளாத்திகுளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.
தமிழ் இலக்கியத்தில் சமூக அக்கறை கொண்ட, மக்கள் நலன் சார்ந்து இயங்கக்கூடிய மிக முக்கிய எழுத்தாளர்களில் பா. செயப்பிரகாசம் ஒருவர். இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 1965-இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்றவர்.
தமிழ் ஈழத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்த இவர், இதற்காகவும் கைதாகியிருக்கிறார்.
இவரது படைப்புகள் தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன. தமிழ்ச் சிறுகதைகளில் தவிர்க்க முடியாதவர் பா. செயப்பிரகாசம்
காடு, இரவுகள் உடையும், புதியன, இரவு மழை உள்பட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை பா. செயப்பிரகாசம் எழுதியுள்ளார். பள்ளிக்கூடம், மணல் என இரண்டு நாவல்களையும் அவர் எழுதியுள்ளார்.