பல மாதங்களுக்கு முன்னிருந்தே நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இத் திட்டம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்ப குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்துச் சேவை பற்றி அறிமுகம் செய்யப்பட்டது.
கொழும்பு நகரின் பெரும்பாலான பிரதான நிலையங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வளவு தூரம் பேருந்தில் பயணித்தாலும் 200 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எனபது இத்திட்டத்தின் சிறப்பாகும்.
தொலைபேசி செயலி மூலம் கட்டணம் செலுத்தப்படும் என்பதால், இந்த பேருந்துகளில் நடத்துனர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.