காலை புலரும் நேரம்
கடல் கரையில் ஒரு ஓரம்
தானாய் வந்த பறவை எல்லாம்
ஏதோ சொல்லிப்பாடுது
ஏழு கடல் ஓடி வந்து
எத்தனையோ வர்ணம் தீட்டும்
காடு எல்லாம் ஆடி ஆடி
கவிதை பல பேசும்
ஆலமரம் செழித்து நிற்கும்
அன்னைத் தமிழ் இசை பாடும்
பாடி வரும் தென்றல் காற்று
பண் இசைந்து ஓடி வரும்
வசந்தம் எல்லாம் பூத்திருக்கும்
வானம் எங்கும் கவி பாடும்
பச்சை கிளி பறந்து வந்து
மெட்டோடு பாட்டிசைக்கும்
வயல்கள் எங்கும் புல் முளைக்கும்
மழைகள் வந்து நனைந்திருக்கும்
அருகில் ஒரு ஆலமரம்
அங்கு வந்து குயில்கள் கூவும்
செந்தமிழாய் எங்கும் இசை
எட்டுத் திசை ஒலிக்கும்
எம் தமிழே எழுந்து வர
எத்தனையோ மணி ஒலிக்கும்
எங்குமே கவிதை மொழி
எம் தமிழில் உயிர்க்குது
தத்துவத்தின் வாழ்வு தனை
தமிழ் எங்கும் சொல்லுது
சின்னச் சின்ன சிட்டுக் குருவி
கொஞ்சி விளையாடுது
என்னருகில் வந்திருந்து
செந்தமிழில் பேசுது
செம்பருத்தி இதழ் காறி
வண்ண மலர் முகக்காரி
எங்க தமிழ் பூக்காறி
அன்ன நடை நடந்து வர
தன்னைப் போல அழகு என்று
மல்லிகைப் பூ சிரித்திருக்கும்
ஆற்றம் கரை ஓரம்
அன்னை சக்தி வாழும் கோவில் மணி
ஏழு கடலும் ஒலிக்கிறது
எங்கும் அமைதி கொள்கிறது
எங்கிருந்ததோ பெண் ஒருத்தி
ஏழு சுரம் இசைக்கின்றாள்.
பா.உதயன்