பொலனறுவை, வெலிக்கந்தை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விரைந்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்த கைதிகளில் 50 பேர் வரையில் தப்பிச் சென்றிருந்தனர். எனினும், பின்னர் 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு நிலையத்தில் சரணடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் கைதிகள் 5 பேரும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் 5 பேரும் என 10 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.