இந்து மதத்தின் முதல் வணங்கப்படும் கடவுளாக விநாயகப் பெருமான் காணப்டுகின்றார். விக்னங்கனுக்கு அதிபதியாகக் காணப்படும் இவரை நாம் எந்த சுபகாரியங்களை தொடங்கும் முன்பு வழிபட்டு விட்டு தொடங்கினால் எந்த இடையூறும் ஏற்படாமல் காரியசித்தி ஏற்படும்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைப்பிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பம் பெறுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால் சங்கடங்கள் விலகிச் செல்லும். பெரும் புகழ் வந்து சேரும் அதோடு அனைத்து நோய்களும் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி அறிவு கூடும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். வீட்டில் இன்பம் பெருகும்.
எனவே விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒவ்வொரு மாதமும் அனுஷ்டித்து அதன் பலனைப் பெறுவோம்.