அவுஸ்த்திரேலியாவில் கடந்த சில நாட்களாக t20 நடை பெற்று வரும் நிலையில் இலங்கை அணியும் அதில் குழு இரண்டில் கலந்து தனது திறமையை காட்டி இருந்தது இறுதியாக இங்கிலாந்தை எதிர்த்து விளையாடி தோல்வி அடைந்து அரை இறுதிக்கு செல்ல முடியாமல் போனது
இந்த நிலையில் அந்த பட்டியலில் குணாதிலக்கவும் இருந்தார் அவர் ஒரு இடது கை துடுப்பாட்ட வீரர் என்பது அனைவரும் அறிந்ததே இவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக ரிசவ் வீரர்களில் இடம் பிடித்திருந்தார்.
அந்த பொழுதுகளில் ஒரு அவுஸ்திரேலிய சார் பெண்ணுடன் டேட்டிங் அப்பில் பழக்கம் பிடித்து அந்த பெண்ணுடன் டாடேடிங் போன போது அவரிடம் அத்து மீறி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் பொலிஸ் புகார் செய்ததால் சிறைக்கு போகவேண்டிய நிலை ஏற்பட்டது.
அத்துடன் அவுஸ்த்திரேலியாவில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வன்மையான சட்டம் உள்ளதால் அவருக்கு பிணை கிடைக்கவில்லை எனவே அவர் இன்று 17வருடகால சிறைவாசம் அனுபவிக்க வேண்டியுள்ளது . மேலும் இவர் இப்படியான குற்றச்சாட்டில் சிக்கியது முதல் முறை அல்ல இதற்கு முதலும் இலங்கையில் ஒரு இரவு விடுதியில் ஒரு பெண்ணிடம் பிழையாக நடக்க முயன்று அடி வேண்டினார் என்பதும் குறிப்பிட வேண்டிய விடயம்
இப்போது அவருக்கு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.