தமிழ்ப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, நியூசெர்சி தமிழ்ப் பேரவை மற்றும் விதை புத்தகக் களம் இணைந்து நடத்தும் “புத்தகக் கண்காட்சி” நடைபெற உள்ளது. பொன்னியின் செல்வன், வேள்பாரி போன்ற வரலாற்றுப் புதினங்களுடன், பிரபஞ்சன், எஸ்.ரா, ஜெயகாந்தன், தி.ஜா, அசோகமித்ரன் போன்ற சமகாலத் தமிழ் எழுத்தாளர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளன.
இது நியூசெர்சியில் நடக்க உள்ள புத்தகக் கண்காட்சியில் அதிக புத்தகங்களை காட்சிப்படுத்தும் முதல் புத்தகக் கண்காட்சி ஆகும்.
வரும் நவம்பர் மாதம், 19 ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 4 மணி முதல், நியூசெர்சி தமிழ்ப் பேரவை நடத்தும் இலையுதிர் விழாவில் பங்கேற்கத் தயாராகுங்கள்
https://njtamilperavai.org/fall2022/