0
பருத்தித்துறை பொலிஸாரின் அதிரடியான சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை நகர் பகுதிகளில் பெண்களுடன் தொடர்ச்சியாகச் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பு இன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.