0
தேவையான பொருட்கள்
பட் தாய் சாஸ் செய்ய
பிஷ் சாஸ் – 2 மேசைக்கரண்டி
தாய் சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
புளி தண்ணீர் – 1 மேசைக்கரண்டி
பனை வெல்லம் – 1 முழு மேசைக்கரண்டி
பட் தாய் நூடுல்ஸ் செய்ய
ரைஸ் நூடுல்ஸ் – 250 கிராம்
சூடு தண்ணீர்
உப்பு
வேர்கடலை – 2 மேசைக்கரண்டி வறுத்தது
எண்ணெய்
எலும்பில்லாத சிக்கன்
இறால்
பூண்டு பொடியாக நறுக்கியது
மிளகு தூள்
முட்டை – 2
டோஃபு பன்னீர்
முளைகட்டிய தானியம்
வெங்காயத்தாள்
சிவப்பு மிளகாய்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ரைஸ் நூடுல்ஸ், சுடுதண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் வைக்கவும்.
- அடுத்து வறுத்த வேர்க்கடலையை இடித்து வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் பிஷ் சாஸ், தாய் சில்லி சாஸ், புளி தண்ணீர், பனை வெல்லம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் எலும்பில்லாத சிக்கனை சேர்த்து வதக்கவும்.
- பின்பு இறால் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பிறகு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
- இறால் வெந்ததும் நூடுல்ஸை சேர்த்து கலந்துவிடவும்.
- பின்பு பட் தாய் சாஸ்சை ஊற்றி கலந்துவிடவும்.
- அடுத்து எண்ணெய் ஊற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றி முட்டையை கிளறி முட்டை வெந்ததும் நூடுல்ஸ் உடன் சேர்த்து கலந்துவிடவும்.
- பிறகு வறுத்த டோஃபு பன்னீர், இடித்த வேர்கடலை சேர்த்து கலந்துவிடவும்.
- பின்பு முளைகட்டிய தானியம், நறுக்கிய வெங்காயத்தாள், சிவப்பு மிளகாய் சேர்த்து கலந்து இறக்கவும்.
- பட் தாய் நூடுல்ஸ் தயார்!