தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68 ஆவது பிறந்த நாள் நிகழ்வு இன்று தரணியெங்கும் கொண்டாடப்பட்டது.
தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும், ஸ்ரீலங்காவின் இதர பகுதிகளிலும் பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் கண்காணிப்பு இன்று தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும், தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் இன்று பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் கொண்டாடப்பட்டன.
யாழ்ப்பாணம், வடமராட்சி – வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பூர்வீக வீட்டின் முன்பாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது.
அதன்போது பொதுமக்களுக்கு எள்ளுருண்டைகள் மற்றும் இனிப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டன.