வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்குச் சுமார் 9 இலட்சம் கிலோகிராம் அரிசியை சீன அரசு வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைவாக சீனாவுடனான இலங்கையின் இராஜதந்திர உறவு மூலம் இந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த அரிசி இன்று கிளிநொச்சி அரச தானிய களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டது. எதிர்வரும் நாட்களில் குறித்த அரிசி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவாகக் காணப்படுவதால் இவ்வாறான இராஜதந்திர உறவு மூலம் உதவிகள் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடக்கு மாகாண கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பொதுமுகாமையாளர் ஜீவநாயகம் கருத்துத் தெரிவித்துள்ளார்.