2022 உலக கோப்பை கால்பந்தாட்டம் கட்டாரில் சிறப்பாக நடை பெற்று வருகின்றது . அனைவரது பார்வையும் இப்போது கட்டாரின் மேல் உள்ளது. உலக பொருளாதாரம் கீழ் நிலையில் உள்ள நேரத்தில் கட்டார் நாடு இத்தனை செலவுகளை செய்து வரலாறு காணாத ஆச்சரியத்தில் அனைவரையும் ஆழ்த்தி உள்ளது .
2010 ஆம் ஆண்டு அமேரிக்கா, அவுஸ்த்திரேலியா , ஜப்பான் , பிரான்ஸ் ஆகிய பலம்பொருந்திய நாடுகளை எல்லாம் பின் தள்ளி போட்டி நடத்துவதற்கான உரிமத்தை பெற்றது. சுமார் 220 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்து வருகிறது. ரஸ்யா இதற்கு முதல் செய்த செலவை பார்க்க 15 மடங்கு அதிகமாக செலவு செய்து இந்த உலக கோப்பையை நடத்துகிறது.
பொருளாதார அறிஞர்களின் பார்வையில் இந்த எழுற்சி வீழ்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்றே கருதப்படும் நிலை உள்ளது . 2012 பிரேசில் நாட்டில் உலக கோப்பை நடந்ததை` தொடர்ந்து பிரேசில் பாரிய நஷ்டத்தை அடைந்தது எனவே காட்டருக்கும் இந்த நிலை வரலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது. சிறந்த முறையில் ஆயத்தங்களை செய்த கட்டர் தனது மைதான வடிவமைப்பு , நட்சத்திர விடுதி , நெடுஞ்சாலை என்று அனைத்தையும் சிறப்பாக வடிவமைத்து உள்ளது.
மேலும் கால்பந்தாட்டத்தை முதலாவதாக நடத்தும் மத்திய கிழக்காசிய நாடு என்ற பெருமையும் குளிர்கால கால்பந்தாட்டத்தை நடத்தும் நாடு என்ற பெருமையும் கட்டாரையே சாரும். வழமையாக ஜூன்-ஜூலை களிலேயே இந்த போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம் ஆனால் அந்த மாதம் 40 – 50 பாகை செல்ஸியஸாக வெப்பம் காணப்படுவதனால் குளிர்காலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டிகள் இவ்வளவு சிறப்பாக நடத்த மேலும் ஒரு காரணம் சவூதி அரேபியா 2017 திடீர் என்று கட்டர் மீது தடையை விதித்தது இதனை தொடர்ந்து அனைத்து மத்திய கிழக்காசிய நாடுகளும் கட்டார் மீது தடையை விதித்தது. ஐக்கிய அமீரகம் , பகரேன், எகிப்த் அவற்றில் முதலிடத்தில் விதித்த நாடுகளாக உள்ளன.
இந்த தடை நீக்கப்பட வேண்டுமென்றால் ஈரானுடனான உறவை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் தீவிரவாதத்துக்கு ஆதரவாக உள்ளதாகவும் அல்ஜீரா தொலை காட்சிக்கு ஆதரவு வழங்குகின்றமையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தது ஆனால் இவை அனைத்துக்கும் கலங்காத கட்டார் தன் மீது எந்த குற்றங்களும் இல்லை என்பதை நிரூபித்தும் தடைகளை நீக்காத கட்டத்தில் துபாய் பால், காய்கறி , ஏற்றுமதியை நிறுத்திய போ து சலைக்காமல் அடுத்தகட்ட நடவடிக்கையாக கால்நடைகளை இறக்குமதி செய்து பால் உற்பத்தி செய்ய துரித நடவடிக்கை எடுத்தது .
இவ்வாறாக தமது மக்களின் வளர்ச்சிக்காக பாடு பட்ட கட்டார் குழியில் தள்ள நினைத்த சவூதி மன்னன் சல்மான் இந்த கால்பந்தாட்டத்தை காண பல ஆண்ட்டுகளுக்கு பின்னர் கட்டார் வருவது ஒரு காரணமாக கருதப்படுகிறது தனிமை படுத்தபட்ட இடத்திலேயே மேல் வந்த சவாலே இது
மேலும் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் 1950களில் மிக வறுமையில் வாடிய நாடு இதுவாகும்.