அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்குக் கிடைக்க உடனடியாக வழிவகை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில், “அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்”, “மருந்துகளை உடனடியாகப் பெற வழிவகை செய்ய வேண்டும்”, “பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும்”, “சுகாதார உரிமை எமது உரிமை “போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டன.