இன்றைய தினம் (8.12.2022) காலை 9 மணியளவில் வரவு செலவு திட்டம் மீதான 3ஆம் வாக்கெடுப்பு கூட்டத்தொடர் ஆரம்பமானது. இந்த கூட்டத்தொடர் இரவு 9 மணி வரைக்கும் நடை பெறவுள்ளதுடன் 7 மணியளவு வாக்கெடுப்புகள் தொடங்க உள்ளன.
2022 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி அன்று ரணில் விக்ரம சிங்க அவர்களினால் முதல் முறை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில் 15- 22 வரையிலான செலு நாட்கள் நடைபெற்ற வாதாப் பிரதிவாதங்களை தொடர்ந்து 121 பேர் எதிராகவும் பேர் 84 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். பின் 2 ஆம் கட்ட வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் 22 ஆம் திகதி நிறைவேற்ற பட்ட நிலையில் இன்று மூன்றாம் கட்ட வாக்கெடுப்பு நடை பெறவுள்ளது.
இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் பல அரசியல் பிரமுகரும் தமது கருத்துக்களை ஆதரவாகவும் எதிராகவும் ஊடகங்களுக்கு கூறி வரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ . சுமந்திரன் அவர்கள் வரவு செலவு திட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவந்தால் பெரிய அளவிலான குறிப்பாக 300 பில்லியன் அளவில் வரி வ்ருமானத்தை பெறலாம் என்று சர்வஜன நீதி உஊடகவியலாளர் சந்தில் கலந்து கொண்ட போது து கூறியுள்ளார்.
மேலும் நவீன் திஸாநாயக்க இந்த வரவு செலவு திட்டத்தில் மோசமான நிலைமைகள் எதுவும் இல்லாத நிலையில் அதை புறக்கணிக்காது அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எதிராணியினரிடம் கூறியுள்ளார்.
எனினும் எதிரணியினர் இன்றைய தினம் அவர்களின் பலத்தை கூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் வங்கி சேவை ,டெலிகாம் , ஆசிரியர் சங்கம் என்று தொழிற்சங்கம் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ரஞ்சன் சேனா நாயக்க தலைமையில் வரவு செலவு திட்டம் எந்தவிதமான நிவாரணங்களையும் எமக்கு வழங்கவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளது.