“மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்படடுள்ளது.”
– இவ்வாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளுக்கென தனியான நிறுவனங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ்வாறான முறையே நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும் மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் கூறியுள்ளார்.