தீர்க்கப்படாத குஜராத் மத கலவர
தீர்ப்பும்.. மும்முனை போட்டி நிகழ்ந்த குஜராத் தேர்தல் களமும்..
கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா
( மூர்க்கமானமதக்கலவரங்களில்குஜராத்கலவரமேமிககோரமானது. இன்னமும்தீர்க்கப்படாதகுஜராத்மதகலவரதீர்ப்புக்கள்இருக்கும்தருணத்தில், மும்முனைபோட்டிநடந்தகுஜராத்தேர்தல்களநிலவரம்பற்றியஓர்அலசல்)
நேற்று – இன்றல்ல, என்றுமே இந்தியாவில் கலவரங்கள் உருவாவதும், உருவாக்கப்படுவதும் ஒன்றும் புதிதல்ல. மதங்களை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சி என்பது ஆங்கிலேயர் ஆட்சியில் தோன்றிய அரசியல். சுருக்கமாகச் சொன்னால் இந்தியச் சுதந்திரம் என்பதே கலவரத்திற்கு இடையில் பிரசவித்த தேசமே ஆகும்.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக, 1946ல் நவகாளியில் கண்ட கலவரத்தை மனிதாபிமான அடிப்படையில் தடுக்க அன்று காந்தி இருந்தார். இன்று காந்தியின் பெரும் தியாகத்தையே கேலிப் பொருளாக்கும் அரசியல்வாதிகளை அதிகம் இந்தியா கொண்டுள்ளது.
ஆகவே காந்தியின் கொள்கை என்பது பாடத் திட்டத்தில் மருந்துக்கு இருக்கும் மறைபொருளாக மாறிவிட்டது என்பதே யதார்த்தமாகும்.
அப்துல்கலா ம்காணாத கனவு:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2020இல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்றார். ஆனால் அவர் கண்ட கனவுக்கு எதிராக இந்தியா 1946க்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
பாரத நாடு விண்வெளி, சாலை போக்குவரத்து என கடந்த எழுபது ஆண்டுகளில் நூறு மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. பெண்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவம் எனப் பல துறைகளில் முன்னேறி உள்ளது. ஆயினும் இந்தியா, மத அரசியலை விட்டும், சாதி அரசியலை விட்டும் இன்னமும் முன்னேறவில்லை.
குஜராத்கலவரம் – தீர்க்கப்படாததீர்ப்பு:
மதக் கலவரங்களில் குஜராத் கலவரமே மிக கோரமானது.2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள் அயோத்திக்குச் சென்றுவிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரெயிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்களும் சில ராம பக்தர்களும் பயணம் செய்தனர்.
அந்த ரெயில் கோத்ரா இரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்களால் அந்த ரெயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பெட்டியில் இருந்த 70 பேர் கொல்லப்பட்டனர்.
முஸ்லிம்களுக்குஎதிராகபரப்பப்பட்டவதந்தி
அந்தச் சம்பவம் திட்டமிட்டு நடந்ததா அல்லது தீ விபத்தா என விசாரணையில் தெரிய வரும் முன்பே, இதை முஸ்லிம்கள் தான் செய்தனர் என வதந்திகள் பரப்பப்பட்டது. இதனால் குஜராத் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
வி.எஹெச்.பி, பஜ்ரங் தள் அமைப்புகளால் முஸ்லிம்களை குறி வைத்து கொலை, கொள்ளை மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் நடத்தப்பட்டது.
குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும் 20 ஆண்டுகள் கடந்து இன்றும் நீதி கிடைக்கவில்லை என்பது வரலாற்றுத் துயரமாகும்.
குஜராத், சட்டப்பேரவைதேர்தல்:
இதுவரையில் நீதி கிடைக்க குஜராத் கலவரம் நடந்த மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு நடந்த வாக்குப்பதிவுக்குப் பிந்தைய தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அவ்வாறே பாஜக ஆட்சியை வென்றுள்ளது.
2022 உத்தரப்பிரதேசத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, 2024ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை அரசியல் ஆர்வலர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
உ.பி.யில் ஆட்சி அமைக்கும் கட்சி அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர் கதையாக உள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இருக்கும் எதிர்பார்ப்பைப் போல் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் தேர்தலும் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.
மும்முனைப்போட்டி:
குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே நிலவி வந்தது. தற்போது ஆம் ஆத்மியின் வருகையால் குஜராத் களம் மும்முனைப் போட்டியாக மாறியது.
குஜராத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோதி சொந்த மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட தேர்தல் பேரணிகளில் கலந்து கொண்டார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி, 2013, 2015, 2020 எனத் தொடர்ந்து மூன்று முறை டெல்லியில் ஆட்சி அமைத்தது. மாநிலக் கட்சியான ஆம் ஆத்மி கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, டெல்லியைத் தாண்டி கோவாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும், பஞ்சாபில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியையும் அமைத்தது.
முதல்வர் வேட்பாளராக பத்திரிகையாளர் :
குஜராத்தில் பத்திரிகையாளராக இருந்து, ஆம் ஆத்மியில் இணைந்த இசுதான் காத்வி முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
இசுதான் அறிவிப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பி வரும் வேளையில், குஜராத்தின் பாரம்பரியமான காங்கிரசும், பாஜகவும் தங்களது முதல்வர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.
குஜராத்தில் முதல்வன் பட பாணியில் முதல்வர் வேட்பாளராக இந்த இசுதான் காத்வி போட்டியிடுகிறார்.
பாஜகவின் கோட்டையாகச் சொல்லப்படும் குஜராத்தில் கடந்த தேர்தலில் காங்கிரசுடன் கடும் போட்டியிட்டு, பாஜக போராடிக் குறைவான சதவீதத்திலேயே ஆட்சியைப் பிடித்தது.
பாரத்ஜோடோ யாத்திரை:
அதேவேளை பாரத் ஜோடோ யாத்திரை மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் நடத்தி மக்களின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் கட்சி முயன்றது.
கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய பிரசாரம் தெற்கு, வட மாநிலங்கள் வழியாக நடந்து வருகிறது. இவற்றுக்கு இடையே ராகுல் காந்தி குஜராத் மாநில தேர்தல் பரப்புரைக்கும் சில முறை சென்றிருந்தார். ஆனால், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி மேலும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது.
குஜராத்தில் இருக்கும் பட்டேல் சமூக மக்களுக்கான உரிய அங்கீகாரத்தை பாஜக தரவில்லை எனக் கூறி, பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து தனக்கு பெரும் வாக்கு வங்கியைச் சேர்த்து வைத்திருந்தார்.
காங்கிரசில் இருந்த ஹர்திக் பட்டேல், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தார். குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபாணி திடீரென ராஜினாமா செய்ய அந்த இடத்தை பாஜக புபேந்திரபாய் பட்டேலைக் கொண்டு நிரப்பி பட்டேல் சமூகத்திற்கு பாஜக மீது இருந்த அதிருப்தியைச் சமாளித்தது. அடுத்தடுத்து குஜராத்தில் நடந்த இந்த அரசியல் மாற்றங்களால் காங்கிரசின் பலம் குறைந்து மீண்டும் பாஜகவின் கை ஓங்கியது. இது 2022 தேர்தலிலும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்.
ஏழாவது முறையாக தொடர் வெற்றி
பாரம்பரியமாக குஜராத்தில் 27 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பாஜக, தனது வாக்கு அரசியல் யுக்தியுடன் களம் இறங்கி ஆட்சியை வென்றுள்ளது.