3
என்னில் எஞ்சும்
உன் அடையாளங்களால்
உன்மத்தம் கொண்டு
அலையும் உள்ளத்தின்
சல்லடைத் தேடலின்
ஜென்மத்தின் பலனாய் நீ
ஒவ்வொரு தேடலிலும்
ஆயிரம் அறிதல்
ஒவ்வொரு அறிதலிலும்
ஆயிரம் புரிதல்
ஒவ்வொரு புரிதலும்
ஆயிரம் இணைதல்
என்னில்தான் இருக்கின்றாய் நீ
எனக்குள் ஓடி நான்
ஒழிந்த இடமெல்லாம்
ஔிர்ந்தது நீயே
எட்டுத்திக்கிலிருந்தும்
என்னிடம் பேசினாய்
மௌனமாய்..
காதல்
எல்லா மொழிகளிலும்
மௌனத்தை மொழிபெயர்த்து
கவிதை எழுதத் தொடங்கியது..
சங்கரி சிவகணேசன்