3
தருபவன்
பெறுபவன்
கணிப்பவன்
ரசிப்பவன்
காதலிக்கப்படுபவன்
காதலிப்பவன்
அஞ்சுபவன்
அரவணைப்பவன்
இடம் தருபவன்
அடைக்கலம் கேட்பவன்
பிரபஞ்சத் தொடர்பாளன்
பெயர் எழுத விளைபவன்
தடம் பதிக்கத் துடிப்பவன்
நீர் ஊற்றுபவன்.
எவனுமல்ல…
வளர்வது
வாழ்த்துபவன்
மாற்றத்தை
ரட்சிப்பவன்
உண்மைக்கு
உண்மை
துணையிருந்து,
உருத்தெரியாமல்
தெரியாது
காற்றில் கரைபவன்
கவிஞன்.
சீனு ராமசாமி
( கர்மவீரர் காமராஜ் அவர்களுக்கு)