அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனி புயல் வீசுவதால் மக்கள் குளிரினால் பெரிதும் கஷ்டப்படுவதாக தெரிய வருகிறது.
குறித்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது கடந்த வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வருடங்களில் பெய்து வ்ருய்வதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .
அமெரிக்காவின் நியூயோர்க் , பென்சில்வேனியா, நெவோடா மற்றும் நெபிரஸ்கா ஆகிய மாகாணங்களில் கடும் புயல் வீசுவதாக அமெரிக்க ஊடகங்கள் எச்சரித்து வருகிறது.
பாதை எங்கும் பல அடி உயரத்துக்கு பனி மேடுகள் காணப்படுவதாகவும் குளிரால் அங்குள்ள மக்கள் துன்பப்படுகின்றனர் இதனால் 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது .