செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஆடலன் | த. த.செல்வா

ஆடலன் | த. த.செல்வா

0 minutes read

கண மகிழ் பொழுதினில்
தினம் நனையானேன்
கனல் மழை அதனிலும்
அனல் எதிர் கொண்டேன்

எரிகின்ற துயரதை
வெறி கொண்டு தகர்த்தேன்
நாளை நதியாகி விதி நீளின்
மதிப் பொறி விரிப்பேன்

எதுவந்த போதிலும்
என் தவ வாழ்வை தகர்க்கேன்
துகி லுரிந்திட்ட பாஞ்சாலி
சபதங்கள் மீட்பேன்

மீட்பனாய் நின்றெதிர்
ரட்சனாய் சிரிப்பேன்
ராட்சத அலையிலும்
கசியங் காப்பேன்

பூவுடல் ஒன்றிற்காய்
பூகம்ப மாவேன்
இனி புதியதோர் பேரின்பம்
எதுவெனக் கேட்பேன்

மலை கடல் காடென
பெண்ணிடங் காண்பேன்
அன்பெனுங் குடையினில்
அவளையே காப்பேன்

தாய்மையைக் கொண்டவள்
காலடி பணிவேன்
மீறிய தாடகையர்
தாகத்தை தணிக்கேன்

இரவுடன் இனியவள்
இசைந்திடப் படிப்பேன்
படித்ததை எடுத்துநல்
கவிதைகள் வடிப்பேன்

ஆகாயம் பிரித்தொரு
புட்பகம் விடுவேன்
உன் விருப்புடன் கடத்தியே
கலவிகள் தொடுப்பேன்

மாதுநீ மயிலென ஆடிட
இசைப்பேன்
உன் இடைதொட்ட கரமதை
பூவென சுவைப்பேன்

தேன்கிண்ண புதிர்களில்
தாலூட்டி மகிழ்வேன்
தமிழ் சிந்திடும் வாயதில்
பவளத்தை ரசிப்பேன்

இனிவருங் காலம் களிப்பாக
கள் சொட்டு உண்பேன்
நீ தெவிட்டாத திரவமென
உன் மடிமீது முடிவேன்

த.செல்வா
12.21

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More