0
இலங்கை முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன் ஓய்வு பெற்றுச் செல்கின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசு உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே தடவையில் இவ்வாறு பெருமளவிலான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதால், அரச சேவையில் எத்தகைய வீழ்ச்சியும் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.