எலன் மஸ்க் ட்விட்டர் வாங்கியது முதல் இன்றுவரை பலதரப்பட்ட பஞ்சாயத்துக்கள் ஊடகங்களில் உலவி வரும் வேளையில் மீண்டும் துருநாற்ற சர்ச்சை பேசு பொருளாக உள்ளது.
அப்படி என்னதான் ட்விட்டர் தலைமையகத்தில் நடக்கின்றது. எலன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய நாள் முதல் இன்று வரை பல மாற்றங்களை செய்துவருகின்றார். ஊழியர் எண்ணிக்கையை குறைப்பதில் கவனம் செலுத்தும் எலன் மஸ்க் துப்பரவு பணியாளர்களையும் விட்டு வைத்ததாக இல்லை கலிபோர்னியாவில் உள்ள ட்விட்டர் தலைமையக துப்பரவு தொழிலார்கள் சம்பளம் உயர்த்தி தர போராட்டங்களை நடத்தியதை அடுத்து அவர்களை அனைவரையும் பனி நீக்கம் செய்துள்ளார் .
இதனை தொடர்ந்து ட்விட்டர் தலைமையகம் துரு நாற்றம் வீசுவதாக ஊழியர்கள் கூறி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் டாய்லட் பேப்பர்களை ஊழியர்கள் தமது சொந்த செலவில் வாங்கி வைத்து பயன்படுத்துவதும் தெரிய வருகிறது.