வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் திருகோணமலை பொது விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக பேரணி ஒன்று இடம்பெற்றது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டிய பதாதைகளுடனான பேரணியே முன்னெடுக்கப்பட்டது.
இதில் பொதுமக்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் அங்கத்துவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.